சிம்ரனுடன் டிஸ்டண்ட் மெய்ண்டெய்ன் செய்தேன் – கௌதம் மேனனின் கூச்சம்!
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படமான பாவக்கதைகள் நெட்பிளிக்ஸில் டிசம்பர் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
இயக்குனர் கௌதம் மேனன் கடந்த சில ஆண்டுகளாக நடிகராகவும் பல படங்களில் தோன்றி வருகிறார். அவர் சமீபத்தில் நடித்த டிரான்ஸ் மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன. இந்நிலையில் இப்போது அவர் இயக்கியுள்ள வான் மகள் (பாவக்கதைகள் ஆந்தாலஜியில் ஒரு படம்) அவரே நடித்துள்ளார். அதில் சிம்ரனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சிம்ரனுக்கு ஜோடியாக நடித்தது பற்றி அவர் ஜோதிகா மற்றும் சிம்ரனுடன் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அப்போது அவர் எனக்கு நடிப்பு சம்மந்தமாக சிம்ரன் நிறைய அறிவுரைகள் வழங்கினார். ஆனால் சிம்ரனிடம் இருந்து நான் 7 அடி தொலைவிலேயே நடித்தேன். ஒரு முக்கியமானக் காட்சியில் சிம்ரன் என் கையை பிடித்து நடித்த போது நான் அதிர்ச்சியாகிவிட்டேன் எனக் கூறியுள்ளார்.