திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (17:05 IST)

தபு கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு – அந்தாதூன் குறித்து சிம்ரன்!

அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து நடிகர் சிம்ரன் பேசியுள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும் அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன. படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்ல்ப்படுகிறது. கதைப்படி கார்த்திக்கின் கதாபாத்திரம் ஒரு ஓய்வு பெற்ற நடிகராகவே வருவதாக அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த படத்தை இயக்க முதலில் ஒப்பந்தமான இயக்குனர் மோகன் ராஜா விலக பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தியில் தபு நடித்த வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இப்போது சிம்ரன் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இதை உறுதி செய்துள்ள சிம்ரன் ‘தபுவின் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது மிகப்பெரிய பொறுப்பு, பிரசாந்துடன் மீண்டும் நடிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இயக்குனர் பிரட்ரிக்கின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் மிகவும் சிறப்பாக இருந்தது’ எனக் கூறியுள்ளார்.