கடன் மேல கடன் தனுசுக்கே இத்தனை கோடி தரணும்.! கௌதமை நோக்கி பாயும் தோட்டா.!

Last Updated: புதன், 20 மார்ச் 2019 (13:45 IST)
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் தமிழில் இதுவரை கமல், அஜித், சிம்பு , போன்ற பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல்வேறு மெகாஹிட் படங்களை கொடுத்துள்ளார். 
 

 
தற்போது நடிகர் தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும்  விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் போன்ற படங்களை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையும் இயங்குவதோடு மட்டுமல்லாமல், ஒரு  சில தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கவும் செய்கிறார். 
 
ஆனால், இந்த இரண்டு படங்களும் வெளியாவதில் பல சிக்கல் இருந்துவருகிறது. எனை நோக்கி பாயும் தோட்ட பட பாடல்கள் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றதையடுத்து இப்படம் எப்போது வெளிவரும் என எதிர்பார்ப்போடு காத்திருக்கும் வேளையில் படம் வெளியாகுமா ஆகாத என்ற மிகப்பெரிய குழப்பம் நிலவிவருகிறது.
 
இந்த இரண்டு படத்தை தயாரிப்பதற்காக கௌதம் மேனன் வாங்கிய கடன் மட்டும் தற்போது வட்டியுடன் சேர்த்து 150 கோடிக்கு மேல் ஆகியுள்ளதாம். மேலும், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக தனுஷுக்கு மட்டும் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கிறாராம் கௌதம் மேனன். 
 
இந்த பண கஷ்டத்தை எப்படியாவது சமாளிக்கவே வெப் தொடர்களை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் கௌதம் மேனன். இயக்கத்தை விட்டு விட்டு பட தயாரிப்பில் இறங்கியதால் தான் கௌதம் வாசுதேவ் மேனனிற்கு இவ்வளவு பண பிரச்சனை என்று கோலிவுட் வட்டாரங்கள் பரவலாக பேசிவருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :