ஏப்ரலில் ரிலீஸ் ஆகிறது தனுஷ் படம்; தயாரிப்பாளர் தகவல்

Last Modified புதன், 6 மார்ச் 2019 (22:42 IST)
தனுஷ் நடித்த 'வடசென்னை' மற்றும் 'மாரி 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது அவர் வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் உருவான 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் நீண்ட காலதாமதம் ஆகிவந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டதாக செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் மதன் சற்றுமுன் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் டிரைலர் தயாராகிவிட்டதாகவும், இந்த படத்தை வரும் ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ரொமான்ஸ் கலந்த ஆக்சன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.



இதில் மேலும் படிக்கவும் :