புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 7 மார்ச் 2019 (12:29 IST)

எனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் அப்டேட்ஸ் !

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்ட ட்ரைலர் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்ஸ் வெளிவந்துள்ளது! 


 
காதல் காவிய படங்களுக்கு பெயர்போன கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்  தனுஷ் முதன் முறையாக கூட்டணி அமைத்த படம் ‘எனை நோக்கி  பாயும் தோட்டா’. தனுஷுக்கு ஜோடியாக இப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். டர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமக்க எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பாக  மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
 
இயக்குநர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்து ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றமடைய வைத்தது. பிறகு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
 
இந்நிலையில் பட தயாரிப்பாளர் மதன் தற்போது தனுஷ் ரசிகர்களுக்கு இன்பமூட்டும் விதத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார்.அதில் படத்தின் ட்ரைலர் ரிலீசுக்கு தயாராக உள்ளதாகவும், எல்லாம் சரியாக நடந்தால் படம் ஏப்ரல் மாதம் வெளிவரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


 
இதனை பார்த்த தனுஷ் ரசிகர்களும் கெளதம் மேனன் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இப்படம் நிச்சயம் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் என எதிர்பார்க்கலாம்.