மீண்டும் இணையும் 'புதுப்பேட்டை' ஜோடி!

Last Modified ஞாயிறு, 3 மார்ச் 2019 (17:42 IST)
தனுஷ் நடித்த முக்கியமான படங்களில் ஒன்று 'புதுப்பேட்டை'. செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் ரிலீசின் போது பெரிய வெற்றி பெறவில்லை ஆனால் தற்போது இந்த படம் எப்போது டிவியில் ஒளிபரப்பினாலும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சோனியா அகர்வால், சினேகா ஆகிய இருவரும் நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் தனுஷ்-சினேகா ஜோடி சேரவுள்ளனர்,.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் தனுஷ் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும், அதில் அப்பா தனுஷுக்கு ஜோடியாக சினேகாவும் மகன் தனுஷூக்கு ஜோடியாக ஒரு மலையாள நடிகையும் நடிக்கவுள்ளார்கள்


துரை செந்தில்குமார் இயக்கிய 'கொடி' படத்திலும் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :