விஜய்க்கு மியுசிகல் லவ் ஸ்டோரி… ரஜினிக்கு எமோஷனல் – கௌதம் மேனனின் திட்டம்!
இயக்குனர் கௌதம் மேனன் விஜய் மற்றும் ரஜினிக்கு வித்தியாசமான கதைகளை யோசித்து வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இயக்குனர் கௌதம் மேனன் திரையுலகிற்குள் அறிமுகமாகி இருபது ஆண்டுகளைக் கடந்துள்ளார். இப்போது கடுமையான பொருளாதார சிக்கல்களில் இருக்கும் அவர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்தபேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான ரஜினி மற்றும் விஜய்க்கு என்ன மாதிரியான கதைகளை வைத்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.
அதில் விஜய்யை வைத்து ஒரு மியுசிகல் லவ் ஸ்டோரி கதையும், ரஜினியை வைத்து ஒரு எமோஷனான கதையும் தயார் செய்து அவர்களிடம் போய் சொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.