சிம்பு படத்தின் கதாநாயகி இவர்தானா? மீண்டும் இணையும் ஹிட் கூட்டணி!
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஐசரி கணேஷ் சிம்புவை வைத்து வரிசையாக 2 படங்கள் தயாரிக்க உள்ளதாகவும், அந்த இரண்டு படங்களையும் கௌதம் மேனன் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த படங்களில் ஏதாவது ஒன்றில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
வல்லவன் படத்தின் போது சிம்பு மற்றும் நயன்தாரா ஆகியவர்களுக்கு இடையே காதல் உருவாகி பின்னர் இருவரு கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். அதன் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு இது நம்ம ஆளு படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடித்து நண்பர்களாகினர். அதனால் இம்முறையும் அவரையே நாயகியாக்க படத்தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டது. ஆனால் நயன்தாரா முடியாது என மறுத்துவிட்டாராம்.
இந்நிலையில் இப்போது சிம்புவின் வெற்றிப்படமான விண்னைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். அவரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது.