1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (11:25 IST)

விடுதலை படப்பிடிப்பில் கௌதம் மேனன்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலைப் படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மற்றுமொரு கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்போது நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டு அவர் சம்மந்தமான காட்சிகளில் நடித்து வருகிறார். இயக்கம், நடிப்பு என இரட்டைக் குதிரைகளில் இப்போது சவாரி செய்துவருகிறார் கௌதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.