1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 11 அக்டோபர் 2021 (15:29 IST)

உடல்நல குறைவால் பிரபல நடிகர் காலமானார்!

பிரபல கன்னட நடிகரான சத்யஜித் (72)  1983-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான அல்லா நீனே ஈஷ்வரா நீனே’ என்னும் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கன்னட சினிமாவில் குணசித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் வலம் வந்த அவர் நேற்று உடல் நல குறைவால் பெங்களூருவில் உள்ள பௌரிங் அண்ட் லேடி கர்சண் அரசு மருத்துவமனையில்  உயிரிழந்தார்.
 
இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். ஆகாஷ் ஜித் கன்னட நடிகராக இருக்கிறார் மகள் விமானியாக இருக்கிறார்.  650க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகரின் மரண செய்தியை திரைபிரபலங்கள் பலரும் தங்களது ஆழந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சத்யஜித் இறுதி சடங்கு இன்று நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.