செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (12:12 IST)

படம் முடிந்ததும் குழந்தை பெற நினைத்தார் சமந்தா! – இயக்குனர் பகிர்ந்த தகவல்!

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருந்ததாக இயக்குனர் நீலிமா குனா தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கடந்த 2017ல் திருமணமான நிலையில் சமீபத்தில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்கு பலரும் பல காரணங்களை பேசி வந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்த கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது சமந்தா இயக்குனர் நீலிமா குனா இயக்கும் சாகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நீலிமா குணா “சமந்தாவிடம் இந்த கதையை நாங்கள் சொன்னபோது அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்டுக்குள் முடிக்குமாறும், அதற்கு பிறகு தான் குழந்தை பெற விரும்புவதாகவும் கேட்டிருந்தார்” என கூறியுள்ளார்.