1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (15:10 IST)

ஆட்டையை போட்ட அரிசில் மூர்த்தி.. கூப்பிட்டு திட்டிய சூர்யா! – மூலப்படத்திற்கு நஷ்ட ஈடும் வழங்கினார்!

சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த படம் முறைகேடாக திருடப்பட்டது என்று தெரிந்ததும் சம்பந்தபட்ட நிறுவனத்திற்கு நஷ்ட ஈடு வழங்கியுள்ளார் சூர்யா.

சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான படம் ராமே ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும். சின்ன பட்ஜெட்டில் வெளியான இந்த படத்தை அரிசில் மூர்த்தி எழுதி இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த படம் 2016ல் மராத்தியில் எடுக்கப்பட்ட ரங்கா படாங்கா படத்தின் கதையை அப்பட்டமாக தழுவி எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்நிலையில் இது முன்னதாகவே சூர்யாவுக்கு தெரியாததால் இயக்குனர் அசிரில் மூர்த்தியை அழைத்து கண்டித்ததுடன், சம்பந்தபட்ட மூலப்படத்தை எடுத்தவர்களுக்கும் இழப்பீட்டை வழங்கியுள்ளாராம்.