1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 21 மே 2024 (14:56 IST)

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் சூரி ஹீரோவாக நடித்த விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் அவர் ஹீரோவாக நடித்த ‘கருடன்’ திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் ‘கருடன்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
 
விசுவாசம் உள்ள அடியாள் கேரக்டரில் சூரி நடித்திருக்கும் நிலையில் அதிரடி ஆக்சன் காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகள் ஆகியவற்றில் நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார் என்றும் இத்தனை வருடங்கள் காமெடி நடிகராக இருந்தவரா இவர்? என்று ஆச்சரியப்பட வைப்பதாகவும் இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். 
 
துரை செந்தில்குமார் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரகனி, மைம் கோபி , வடிவுக்கரசி, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் சூரிக்கு நிச்சயம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran