வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (11:56 IST)

ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா மலர் அஞ்சலி!

மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ள இந்த படம் வரும் 10ந்தேதி வெளியாக இருக்கிறது. 
 
இப்படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தலைவி படத்தின் ப்ரோமோஷனுக்காக இன்று சென்னை வந்த கங்கனா முதல் வேலையாக சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் இயக்குனர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்கள் உடன் இருந்தனர்.