ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் ஆறுமுகச்சாமி ஆணையம் தகவல்

arumugasamy
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் ஆறுமுகச்சாமி ஆணையம் தகவல்
siva| Last Updated: திங்கள், 26 ஜூலை 2021 (19:39 IST)
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை எந்த அளவில் முடிந்து உள்ளது என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரணை செய்ய கடந்த 2017ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அப்பல்லோ மருத்துவமனை இடைக்கால தடை கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து தடையும் பெற்றுவிட்டது. இதனால் இந்த ஆணையம் செய்யப்படாமல் இருந்தது
இந்த நிலையில் ஆணையத்திற்காக மாதந்தோறும் 6 லட்ச ரூபாய் செலவு செய்து வரும் நிலையில் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் முடிவடைந்து விட்டது என்றும் தடையை நீக்கினால் விசாரணையை தொடர தொடர்ந்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :