புதன், 10 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 ஏப்ரல் 2025 (10:12 IST)

7 கோடி சம்பளம் வாங்குபவர் ஏன் இளையராஜா இசையை பயன்படுத்த வேண்டும்? கங்கை அமரன்

gangai amaran
ஏழு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு இசையமைப்பாளர் சொந்தமாக கம்போஸ் செய்யாமல், ஏன் இளையராஜாவின் இசையை பயன்படுத்துகிறார்கள் என கங்கை அமரன் கேள்வி எழுப்பிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் சில பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த கங்கை அமரன், "முடிந்தால் அந்த படத்தின் இசையமைப்பாளர், இளையராஜா போன்று மக்களை கவரும் இசையை கம்போஸ் செய்ய வேண்டியது தானே? எதற்காக இளையராஜா இசையை பயன்படுத்த வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார். "ஏழு கோடி சம்பளம் வாங்குபவருக்கு, இது கூட போட தெரியாதா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், "படக்குழுவினர் இளையராஜாவிடம் நேரடியாக சென்று அனுமதி கேட்டால், அவர் இலவசமாக தந்திருப்பார். ஆனால் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதால் தான் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்," என்றும் கூறினார்.

மேலும், குட் பேட் அக்லி திரைப்படங்களில் ஜிவி பிரகாஷ் போட்ட எந்த பாடலுக்கும் கைதட்டல் வரவில்லை. ஆனால் இளையராஜா பாடல் வந்தபோது மட்டும்தான் கைதட்டல் கிடைத்துள்ளது. "அப்படியானால், அந்த கிரெடிட் அவருக்கு தானே போய் சென்று சேர வேண்டும். அவருக்குரிய  ராயல்டி கொடுக்கவேண்டும்," என்றும் அவர் வாதாடினார்.

ஆனால் அதே நேரத்தில், குட் பேட் அக்லி படக்குழுவினர், சம்பந்தப்பட்ட இசை நிறுவனத்திடம் தாங்கள் உரிமை பெற்றுவிட்டதாக கூறி வருகின்றனர்.

Edited by Mahendran