கேம்சேஞ்சர் தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஐடியாவுக்கு நோ சொன்ன ராம்சரண்!
இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் கேம்சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதித் தந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் சேர்த்து 275 கோடி ரூபாய்க்கு வாங்க ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமாகிவிட்டதால் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற ஆலோசனையை தயாரிப்பாளர் தில் ராஜு மேற்கொண்டதாகவும், ஆனால் அதற்கு நடிகர் ராம்சரண் வேண்டாம் என பதிலளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேம்சேஞ்சர் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் இருப்பதால் தமிழிலும் இந்த படத்துக்கு நல்ல டிமாண்ட் இருப்பது குறிப்பிடத்தக்கது.