திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (11:43 IST)

இன்று முதல் தூர்தர்ஷனில் மீண்டும் ‘ஒளியும் ஒலியும்’: புதிய பொலிவுடன் தயார்..!

கடந்த 80களில் தனியார் தொலைக்காட்சிகள் இல்லாத போது பொழுதுபோக்கிற்கு உள்ள ஒரே சேனல் தூர்தர்ஷன் என்பதும் குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியை பலர் விரும்பி பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புதிய மற்றும் பழைய திரைப்படங்களின் பாடல்கள் அதில் ஒளிபரப்பாகும் என்பதும் மீண்டும் ஒளியும் ஒலியும் காண்பதற்கு ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை திரைப்படம் என இரண்டு நிகழ்ச்சிகளை மட்டுமே பெரும்பாலான பொதுமக்கள் பார்த்து வந்தனர். அதன் பிறகு தனியார் தொலைக்காட்சிகள் வந்த பிறகு கிட்டத்தட்ட தூர்தர்ஷனை மறந்துவிட்டனர். 
 
இந்த நிலையில் தற்போது தூர்தர்ஷன் மீண்டும்  பொலிவுடன் திரும்பி வந்துள்ளது. டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் புதிய ஒளிபரப்பு தொடங்கப்பட உள்ளது. இதில் ஒளியும் ஒலியும்ம் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran