1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 14 ஜூன் 2023 (14:06 IST)

ரூ. 300 கோடி பட்ஜெட்டில் ''சக்திமான்'' படம்...இவர்தான் ஹீரோ

sakthiman
தூர்தர்ஷனில் 90 களில் பல எபிசோடுகளாக ஒளிபரப்பப்பட்ட தொடர் சக்திமான். இத்தொடருக்கு அக்கால குழந்தைகள் முதல் பெரியோர் வரை எல்லோரும் ரசிகர்களாக இருந்தனர்.

மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இத்தொடரை இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் இதைப் பார்க்க தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

இதில் சக்திமான் கதாப்பாத்திரத்தில் நடிகர் முகேஷ் கன்னா நடித்திருந்தார். இந்த நிலையில் சக்திமான் தொடரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், மொழிகளில் சினிமா படமாக் எடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி முகேஷ் கன்னா கூறும்போது, சக்திமான் தொடரை ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரையிலான பட்ஜெட்டியில் சர்வதேச தரத்தில் திரைப்படமாக உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தா கியுள்ளது. இத்தொடரில் நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சக்திமான்  படத்தில் நடிகர் ரன்வீர் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.