ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 21 அக்டோபர் 2023 (21:09 IST)

4500 பேருக்கு விஜய்யின் லியோ படத்திற்கான இலவச டிக்கெட்

bilroth hospital
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் வரும் (அக்டோபர் 19 ஆம் தேதி) இன்று  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.

இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலீட்டிய நிலையில் இப்படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலீட்டியதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில்,சென்னை பில்ரோத் மருத்துவமனையில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், குடும்பத்தினர், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என மொத்தம் 4500 பேருக்கு விஜய்யின் லியோ படத்திற்கான இலவச டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் நாளை சென்னையில் உள்ள தியெட்டரில் இப்படத்தை காண உள்ளதாகக் கூறப்படுகிறது.