திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (13:39 IST)

அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி.. அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்.

தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆகிய ஐ.பெரியசாமி திடீரென உடல் நல உறவு காரணமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாக அதிகரித்திருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்தது. 
 
இதனை அடுத்து அவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.  
 
அமைச்சர் ஐ பெரியசாமியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் இன்னும் ஒரு சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva