1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 25 நவம்பர் 2017 (21:59 IST)

என்னை அவருடன் ஒப்பிட வேண்டாம்: ரகுல் வேண்டுகோள்!!

என்னமோ ஏதோ, புத்தகம் போன்ற படங்கள் தமிழ் நடிகையாக அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால், இந்த படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை.
 
அதன் பின்னர், தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு குறைந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாகிவிட்டார். 
 
அதன் பின்னர் ஸ்பைடர் படத்தின் மூலம் தமிழில் ரீஎண்ட்ரி கொடுத்தார். ஆனால், இந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில், அவருக்கு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவியத் துவங்கி உள்ளன. சமீபத்தில், நயன்தாராவை போல் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. 
 
அதற்கு ரகுல், நயன்தாரா சீனியர் நடிகை. அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த நடிகை என்பதை நிரூபித்து இருக்கிறார். நான் இன்னும் அவரை போன்ற வேடங்களில் நடிக்கவில்லை.
 
நயன்தாராவுடன் ஒப்பிடும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. அவரை போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். மற்றபடி நயன்தாரா இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.