1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 9 அக்டோபர் 2017 (16:03 IST)

பட்டாசு மட்டும் வெடிக்காதீர்கள்; யுவராஜ் சிங் வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் தீபாவளிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
தீபத்திருநாளான தீபாவளி பண்டிகையை தீபங்கள் ஏற்றி ஒளி வெள்ளத்தில் கொண்டாடுங்கள். இனிப்புகளை பகிர்ந்து கொண்டு பாட்டு பாடி நடனமாடி உற்சாகமாக கொண்டாடுங்கள். ஆனால் பட்டாசு மட்டும் வெடிக்காதீர்கள். 
 
கடந்த வருடம் தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததால் காற்று மாசு ஏற்பட்டு. மக்கள் சுவாசிக்கவே கஷ்டப்பட்டதை அனைவரும் அறிவோம். இந்த வருடம் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி மகிழ்வோம் என்றார்.
 
இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.