செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2017 (13:29 IST)

அஜித்தைப் போல் ஆக ஆசைப்படுகிறாரா ஜெய்?

அஜித்தைப் போல் ஆக ஆசைப்படுகிறாரா ஜெய் என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.
 
கடந்த ஏழெட்டு வருடங்களாக, தான் நடிக்கும் படத்தின் எந்த புரமோஷனிலும் கலந்து கொள்வதைத் தவிர்த்து வருகிறார் அஜித். படத்தின் பூஜையில் மட்டும் கலந்து கொண்டவர், தற்போது அதிலும் கலந்து கொள்வதில்லை. ஆனாலும், அவருடைய ரசிகர்கள் படத்தை வெற்றிப் படமாக்கிவிடுகின்றனர்.
 
இதே பாணியைத்தான் சில வருடங்களாக ஜெய்யும் கடைப்பிடித்து வருகிறார். ‘சின்ன அஜித்’ என தன்னை நினைத்துக் கொள்ளும் ஜெய், எந்த புரமோஷனுக்கும் வருவதில்லை, யாருக்கும் பேட்டி கொடுப்பதில்லை. இது பிரச்னையாக உருவெடுத்தும், அதைப்பற்றி அவர் கண்டுகொள்வதில்லை.
 
ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ள ‘பலூன்’ படத்தின் பிரஸ்மீட், இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் இரண்டு பேர் மட்டுமே கலந்து கொண்டனர். வழக்கம்போல ஜெய் வரவில்லை. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது என்றொரு பழமொழி உண்டு. ஜெய் அப்படித்தான் நடந்து கொள்கிறார் என்கிறார்கள்.