விஜய் சேதுபதியின் பாட்டு இன்று ரிலீஸாகிறது!

Last Modified திங்கள், 18 டிசம்பர் 2017 (14:13 IST)
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் இருந்து ஒரு பாடல் இன்று ரிலீஸாக இருக்கிறது.
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’. நிகாரிகா கோனிடேலா, காயத்ரி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர்   ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்துக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன், இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து ஒரு பாடலை, இன்று வெளியிடுகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு இந்தப்  பாடல் ரிலீஸாக இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :