வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 31 மே 2018 (20:55 IST)

‘வாணி ராணி’யைத் தொடர்ந்து ராதிகாவின் அடுத்த சீரியல்

‘வாணி ராணி’ இறுதிக்கட்டத்தை நெருங்குவதால், அடுத்த சீரியலில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ராதிகா சரத்குமார்.
சீரியல் உலகில் அசைக்க முடியாத ராணியாக இருந்து வருகிறார் ராதிகா சரத்குமார். ‘சித்தி’ தொடங்கி, அவர் இதுவரை நடித்த, தயாரித்த எல்லா சீரியல்களுமே பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவை. அந்த அளவுக்கு சீரியல் ரசிகர்களின் பல்ஸைக் கணித்து, அதற்கு ஏற்றார்போல் சீரியலைத்  தருவார்.
 
தற்போது அவர் ‘வாணி ராணி’ என்ற சீரியலைத் தயாரித்து, நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலில், அக்கா - தங்கை என  இரண்டு வேடங்களில் அவர் நடிக்கிறார். இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்குவதால், அடுத்த சீரியலில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் ராதிகா  சரத்குமார்.
‘சந்திரகுமாரி’ என இந்த சீரியலுக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு இந்த சீரியல் தயாராக இருக்கிறது. ரஜினியின்  ‘பாட்ஷா’ படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, இந்த சீரியலை இயக்குகிறார்.