கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் நடிக்கும் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?
கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் நடிக்கும் படத்தின் தலைப்பு என்ன என்று தகவல் கிடைத்திருக்கிறது.
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத்சிங் இருவரும் முதன்முறையாக சேர்ந்து நடித்தனர். அந்தப் படம் வெற்றி பெற்றதால், இரண்டாவது முறையாக இந்த ஜோடி இணைந்துள்ளது. அறிமுக இயக்குநர் ரஜத் இந்தப் படத்தை இயக்குகிறார். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹைதராபாத், மும்பை, இமயமலை, ஐரோப்பாவில் இதன் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. இந்தப் படத்துக்கு, ‘தேவ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.