வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 29 மே 2018 (19:57 IST)

மூன்று பேர் மட்டுமே நடிக்கும் ‘ஆக்சிஜன்’

மூன்றே பேர் மட்டுமே நடிக்கும் ‘ஆக்சிஜன்’ என்ற படம் தயாராகி வருகிறது.

 
தன்னுடைய முதல் படமான ‘மெட்ரோ’விலேயே கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன். கிரைம் திரில்லரான இந்தப் படத்தில், சிரிஷ் ஹீரோவாக நடித்தார். செயின் பறிப்பு சம்பவங்கள் எப்படியெல்லாம் நடக்கின்றன என்பதை டீட்டெயிலாகச் சொல்லி, எல்லோருக்கும் எச்சரிக்கை மணி அடித்தது இந்தப் படம்.
 
இந்நிலையில், தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார் ஆனந்த் கிருஷ்ணன். அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘ஆக்சிஜன்’ எனத் தலைப்பு வைத்துள்ளார். தலைப்பைப் பார்த்து இது சுற்றுச்சூழல் சார்ந்த படம் என நினைத்துவிட வேண்டாம். 
 
இதுவும் கிரைம் சார்ந்த படம்தான். நேர்மையாக வாழ்பவர்கள்தான் இந்த உலகத்தின் ஆக்சிஜன் என்ற கருத்தை வலியுறுத்தி இந்தப் படம் எடுக்கப்படுகிறது.
 
இந்தப் படத்தில் அசோக் செல்வனைத் தவிர, இன்னும் இரண்டு பேர் மட்டுமே நடிக்கின்றனர். ஒருவர் யோகிபாபு, இன்னொருவர் யார் என்பதைத் தேடி வருகிறார் ஆனந்த் கிருஷ்ணன்.