வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 16 மார்ச் 2023 (19:36 IST)

சினிமா தயாரிப்பாளர் சி.என்.ஜெய்குமார் காலமானார்..பாரதிராஜா நெரில் சென்று அஞ்சலி

jeykumar
தமிழ்சினிமாவில் புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் தயயாரிப்பாளர்களில் ஒருவரான சி.என்.ஜெய்குமார் இன்று காலமானார்.
 

தமிழ் சினிமாவின் பிரபல  நடிகர் மயில்சாமி கடந்த சில நாட்களுக்கு முன் காலமானார். இந்த நிலையில், மீண்டும் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் இன்று காலமாகியுள்ளது ரசிகர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'புது நெல்லு புது நாத்து' என்ற படத்தின் தயாரிப்பாளார்களில் ஒருவரான சி.என்.ஜெய்குமார் சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலமானார்.

இவரது உடலுக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

மேலும், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.கே. சண்முகம், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தயாரிப்பாளார்கள் சித்ரா லட்சுமணன், முரளி, நடிகர் மனோஜ்,. தொழிலதிபர்கள், சினிமாத்துறையினர், உள்ளிட்ட பலரும், ஷெனாய் நகரில் உள்ள அவரது இல்லத்திற்குச்   சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.