1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 20 டிசம்பர் 2019 (13:46 IST)

”ஹீரோ” வை ஜெயிப்பாரா ”தம்பி”?? நெட்டிசன்ஸ் ரிவ்யூ

இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள கார்த்தி, ஜோதிகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள தம்பி திரைப்படத்தை குறித்து நெட்டிசன்களின் விமர்சனங்களை பார்க்கலாம்

கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், பாலா சிங், நெடுமுடி வேணு, இளவரசு உள்ளிட்ட பலரின் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் “தம்பி”. சிவகார்த்திகேயனின் “ஹீரோ” திரைப்படமும் இன்று வெளிவந்துள்ள நிலையில் அதற்கு இணையாக கார்த்தியின் ”தம்பி” திரைப்படத்திற்கும் கணிசமானோர் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

கமலின் வெற்றித் திரைப்படமான பாபநாசம் திரைப்படத்தை இயக்கிய ஜீது ஜோசப் தான் தம்பி திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு பெரும்பாலும் பாஸிட்டிவ் ரிவ்யூக்களே வந்துள்ளது. மேலும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம் எனவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்திற்கான நெட்டிசன்களின் ரிவ்யூக்களை தற்போது பார்க்கலாம்.