செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 24 அக்டோபர் 2019 (18:27 IST)

ரசிகர்களின் குவிந்து கிடக்கும் அன்பு... ’சேரன் ஆர்மி ’வீடியோ .. சேரன் நெகிழ்ச்சி

தமிழகத்தில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  'பிக் பாஸ் சீசன் - 3' களைகட்டிய முடிவடைந்து விட்டது. பல களேபரங்கள் சர்ச்சைகளுக்கு பின் மக்களின் பொழுதுபோக்கு அம்சம் ஒன்று  குறைந்துள்ளது. 
இனி அடுத்த பிஸ் பாஸ் 4 எப்போது ? அதில் யாரெல்லாம் பங்குபெறுவார்கள் ? யார் தொகுத்து வழங்குவது ? என்பது போன்ற கேள்விகளை மக்கள் இப்போதே எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சேரனுக்கு ஏராளமான மக்கள நெருக்கமாகி விட்டனர்.
 
இந்நிலையில் , சேரன் ரசிகர்கள் இணைந்து ,சேரன் ஆர்மி 2.0 என்றொரு டுவிட்டர் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.
 
அதில், சேரனை குறித்த ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளனர். அதில், நாங்கள் எப்போதும் உங்களை விரும்புகிறோன்.. நீங்கள்  ஒரு சிறந்த முழுமையான மனிதர் எனது பார்வையில் என்று பதிவிட்டுள்ளனர்.
 
அதற்கு முன்னதாக, அக்டோபர் 8 ஆம் தேதி ஒரு விடீயோவை சேரனுக்கா அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், அன்புள்ள சேரன் உங்களுக்காக குவிந்து கிடைக்கும் அன்பில் ஒரு சில. எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நீங்கள் என்றும் எங்கள் சேரன். நிமிர்ந்த பார்வை,தெளிந்த பேச்சால் எங்களை உங்கள் வசப்படுத்திவிட்டீர்கள்.வாழ்க வளமுடன்@vijaytelevision @ikamalhaasan @directorcheran #CheranArmy proudARmy..என்று குறிப்பிட்டுள்ளனர்.
 
இதைப்பார்த்த சேரன் நெகிழ்ந்துபோய்,  காணொளியை தொகுத்தவர்களுக்கும் அதில் அன்பு காட்டிய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி.. அந்த அத்தியாயம் முடிந்தது.. ஒரே இடத்தில் நின்றுவிட்டால் உலகம் நம்மை கடந்துபோய்விடும்.. அடுத்த வேலை நோக்கி அனைவரும் நகர்வோம்.. 
 
எல்லோரின் வாழ்க்கையும் அவரவர் கைகளில் மட்டுமே உள்ளது.. வாழ்த்துக்கள்..என தெரிவித்துள்ளார்.
 
அன்புள்ளசேரன் உங்களுக்காக குவிந்து கிடைக்கும் அன்பில் ஒரு சில. எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நீங்கள் என்றும் எங்கள் சேரன். நிமிர்ந்த பார்வை,தெளிந்த பேச்சால் எங்களை உங்கள் வசப்படுத்திவிட்டீர்கள்.வாழ்க வளமுடன்