செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 24 அக்டோபர் 2019 (12:19 IST)

வீட்டிற்கு சென்று சந்தித்த சேரன்...விருந்து வைத்த மதுமிதா - வைரலாகும் புகைப்படம் இதோ!

பிக்பஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுள் ஒருவரான மதுமிதா பெரும் பிரச்சனைகளுக்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென வீட்டை விட்டு வெளியேறினார். 


 
காவிரி பிரச்னை குறித்து கருத்து தெரிவித்ததால் சக போட்டியாளர்கள் அவருடன் சண்டைக்கு வந்துள்ளனர். பின்னர் தன் கையை அறுத்துக்கொண்டதால் அந்நிகழ்ச்சியில் இருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரத்தில் வருக்கு ஆதரவாக இருந்தது சேரன் மற்றும் கஸ்தூரி என அவர் கமலிடம் மேடையில் கூறியிருந்தார். 


 
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரன்,  மதுமிதாவின் வீட்டிற்கு  சென்று அவரை சந்தித்துள்ளார் அவருக்கு மதுமிதா மத்திய விருந்து கொடுத்து உபசரித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.