சிறுநீரகத்தை தானம் கொடுத்த பெண்ணை பாராட்டிய பிரதமர் மோடி

Sinoj| Last Modified திங்கள், 15 பிப்ரவரி 2021 (22:13 IST)
 

தனது சிறுநீரகத்தை ஆதவரவற்ற இளைஞருக்குக் தானம் கொடுத்திருக்கிறார் ஒரு பெண். அவரது செயலை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இந்த உலகம் மனிதநேயமிக்க மனிதர்களால் இன்னும் துடிப்புடன் வாழ்ந்து கொண்டுதானுள்ளது என்பதற்கு அன்றாடம் நாம் காணும் இந்த உலகில் எத்தனையோ மனிதர்கள் உதாரணங்களாக இருக்கிறார்கள்.

அந்த வகையில், தனது சிறுநீரகத்தை ஒரு பெண் தானம் அளித்துத், தனது மனிதநேயத்தால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி உடல் உறுப்பு தானம் பற்றி பேசிய பேச்சுகளால் கவரப்பட்ட கொல்கத்தாவை சேர்ந்த பெண் மானாஷி ஹால்டர். தனது சிறுநீரகத்தை ஆதரவற்ற ஒருவருக்குத் தானமாகக் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அறிந்த பிரதமர் மோடி, உடல் உறுப்பு தானம் மானாஷி ஹால்டரின் தன்னலமற்ற செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று பாராட்டியுள்ளார்,.இதில் மேலும் படிக்கவும் :