புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 18 அக்டோபர் 2018 (11:13 IST)

கொண்டாடும் விஜய் ரசிகர்கள்! சர்காரைவிட டுவிட்டரில் டாப் ட்ரெண்டிங் இதுதான்!

மெர்சல் திரைப்படம் வெளியாகி 1 வருடங்கள் ஆனதை தொடர்ந்து,  #1YearOfMegaBBMERSAL என்ற ஹேஸ்டேக் உருவாக்கி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
 
அட்லி இயக்கத்தில் விஜய், சத்யராஜ், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்த இந்த படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 
 
ஜிஎஸ்டி, தனியார் மருத்துவமனைகள் செய்யும் கொள்ளை உள்ளிட்ட சமூக விஷயங்களை மெர்சல் பேசியிருந்தது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு  வெளியான மெர்சல் படத்தில் விஜய் பேசிய சில வசனங்களுக்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. 
 
இதுவே படத்துக்கு மிகப்பெரிய புரோமோஷனாக அமைந்தது.  மேலும் பெரும் வசூல் சாதனை படைத்தது. பாகுபலிக்கு பிறகு தென்னிந்திய மொழி திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையை மெர்சல் படைத்தது. சீனாவிலும் மெர்சல் வெளியாக உள்ளது.