1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (19:42 IST)

தளபதி விஜய்யின் 'சர்கார்' தெலுங்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நவம்பர் 6ம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது. 
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார்.  வரலட்சுமி சரத்குமார்,  ராதாரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துளளார். கங்காதரன்  ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்து வருகிறார்.
 
சர்கார் படத்தை வாங்கியுள்ள தயாரிப்பாளர் அசோக், இந்த மாத இறுதியில் ஹைதரபாத்தில் பட வெளியிட்டு குறித்த முன்னோட்ட விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்.