1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 அக்டோபர் 2018 (20:32 IST)

சீதக்காதி'யின் இளமையான செகண்ட்லுக் போஸ்டர்

சீதக்காதி'யின் இளமையான செகண்ட்லுக் போஸ்டர்
விஜய்சேதுபதி நடித்து கொண்டிருக்கும் 'சீதக்காதி' திரைப்படம் என்றாலே அந்த படத்தில் விஜய்சேதுபதி முதியவர் கேரக்டரில் நடித்தது தான் ஞாபகம் வரும். வயதான தோற்றத்திற்காக விஜய்சேதுபதி பலமணி நேரம் பொறுமையுடன் மேக்கப் போட்டு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'சீதக்காதி' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் 'சீதக்காதி'யின் இளமை தோற்றம் மிகவும் வித்தியாசமாக உள்ளது. இந்த செகண்ட் லுக் போஸ்டர் விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மேலும் சீதக்காதி திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

சீதக்காதி'யின் இளமையான செகண்ட்லுக் போஸ்டர்
.'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, அர்ச்சனா, மகேந்திரன், மெளலி, பகவதி பெருமாள், ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்ரனர். இந்த படத்திற்கு '96' புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்