சூப்பர் ஸ்டாரின் கழுத்தில் பாம்பை தூக்கிப் போட்ட ரசிகர் !

sharuk khan
Last Modified சனி, 10 ஆகஸ்ட் 2019 (19:07 IST)
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வரவேற்க வந்த அந்த நாட்டைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தான் வளர்ந்து வந்த மலைப்  பாம்புடன் ஷாருக்கானை  வரவேற்றுள்ளார். அப்போது, ஷாருக்கான் கழுத்தில் மலைப்பாம்புடன் நின்றுள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது,
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பெர்ன் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்,சூப்பர் டீலக்ஸ் படத்தில்  நடித்த விஜய் சேதுபதி, காயத்ரி போன்ற நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில் அங்குள்ள லா துரோப் பல்கலைக் கழகத்தில் ஷாருக்கானிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இது ஷாருக்கானிற்கு வழங்கப்படும்  5 வது டாக்டர் பட்டம் ஆகும். இந்த நிகழ்வின் போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
ஷாருக்கானை வரவேற்கும் விதமாக ஒருவர், பெரிய மாலை போல் இந்த மலைப் பாம்பை ஷாருக்கான் மீது போட, முதலில் அதிர்ச்சி அடைந்த அவர், பின்னர் இயல்புக்கு திரும்பி போட்டோவுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் வைரலாகிவருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :