"ரசிகனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்" சிம்புவால் நொந்துபோன ரசிகன் - வைரல் வீடியோ!
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்து வந்த நடிகர் சிம்பு சமீப நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு நல்ல படங்ககளை கொடுப்பதில்லை. ஆனாலும் அவரது ரசிகர்கள் ஒருபோதும் சிம்புவை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
சர்ச்சைகளில் சிக்கினாலும் சரி, பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் சரி, பெரிதும் எதிர்பார்த்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் சரி சிம்புவின் எல்லா இக்கட்டான சூழ்நிலைகளிலும் அவருக்கு ஆதரவாக இருந்து உற்சாகப்படுத்துவார்கள். ஆனால் தற்போது செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த படமும் அமையவில்லை.
இதற்கிடையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகிருந்த நிலையில் சரியாக படப்பிடிப்புக்கு செல்லவில்லை என்பதாலும் வெங்கட் பிரபுவுக்கும் , சிம்வுக்கும் ஏற்பட்ட சில மன கசப்பினாலும் இந்த டிராப் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதனை அறிந்து மனவேதனைப்பட்ட அவரது தீவிர ரசிகர் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.