செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 ஜனவரி 2021 (12:07 IST)

விஜய்க்கு ஜோடியாகும் சமந்தாவின் போட்டியாளர் – தளபதி 65 பட நாயகி இவர்தானா?

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

விஜய் நடிப்பில் உருவாக வுள்ள தளபதி 65 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாகக் கலக்கி வரும் பூஜா ஹெக்டேதான் விஜய்க்கு ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்கப் போகிறாராம்.

தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவில் வரிசையாக வெற்றி படங்களைக் கொடுத்து இப்போது பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சக நடிகையான சமந்தாவின் ரசிகர்களும் இவரின் ரசிகர்களும் டோலிவுட்டில் அடித்துக் கொள்வது விஜய் அஜித் ரசிகர்களின் சண்டைக்கு நிகரானது.