ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (12:13 IST)

கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவர் – குவியும் வாழ்த்துகள்!

கேரளாவில் மருத்துவப் படிப்பை முடித்து முதல் மருத்துவராக திருநங்கை ஒருவர் பதவியேற்றுள்ளார்.

இந்தியாவில் இப்போது மெல்ல மெல்ல மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய மரியாதையும் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரமும் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எல்லா துறைகளிலும் நுழைந்து சாதித்து வரும் அவர்கள் இப்போது மருத்துவத்துறைக்குள்ளும் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

கேரளாவைச் சேர்ந்த ப்ரியா என்ற திருநங்கை முதல் மருத்துவராகப் பணியாற்ற உள்ளார். அவருக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.