ரூ.498 கோடி சொத்து மதிப்பு....கணவரை விவாகரத்து செய்யும் பிரபல பாடகி
அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவர் 90 களில் இருந்தே பாப் இசையின் ராணி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
இன்று பாப் உலகில் பலர் வந்து விட்டாலும் அவருக்கான இடம் அப்படியே உள்ளது. உலகம் முழுவதும் அவருக்கு என கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், இவர் பிரபல நடிகர் ஸாம் அஸ்கரியை ஐந்து ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், இருவரும் பிரியப் போவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து கடந்த ஜூலை 28 ல் ''பிரிட்டினியும் நானும் பிரிந்துவிட்டதாக'' அஸ்கரி கூறிய நிலையில் நேற்று அஸ்கரி விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தார்.
இந்த நிலையில், ரூ.498 கோடி சொத்து மதிப்புள்ள பிரிட்னி ஸ்பியர் தன் தரப்பில் வழக்கறிஞராக பிரபலமான வழக்கறிஞர் லாரா வாஸ்ஸரை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்து.