திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (19:40 IST)

பிரபல நடிகையின் கணவர் 30 வயதில் மரணம்

aravinth sekar-suruthi sanmugam
சின்னத்திரை நடிகை சுருதி சண்முக பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் 30 வயதில் மரணமடைந்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆனவர் சுருதி சண்முக பிரியா. இவர், கல்யாண பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா  உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் தன் நீண்ட நாள் காதலரான அரவிந்த் சேகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குத் திருமணமாகி ஓராண்டு ஆகும் நிலையில், சுருதியின் கணவர் அரவிந்த்  மாரடைப்பால் காலமானார்.

இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர், சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 அரவிந்த் சேகர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு ‘’மிஸ்டர் தமிழ்நாடு’’ பட்டம் வென்றவர் ஆவார்.