1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: திங்கள், 12 செப்டம்பர் 2022 (17:25 IST)

கமலின் கையை முத்தமிட்ட பிரபல முன்னணி நடிகர்..வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் கமலின் கரங்களைத் தொட்டு முத்தமிட்டார் பிரபல முன்னணி நடிகர்.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இதுவரை  நடிக்காத கதாப்பாத்திரங்களே இல்லை எனும் அளவுக்கு ஏராளமான படங்களில் தன் 60 ஆண்டுகால சினிமாபயணத்தில் சாதனை செய்துவிட்டார்.

இருப்பினும், இன்றைய கால இளம் நடிகர்களுக்கு  கமல், நடிப்பிலும், தொழில் நுட்பத்திலும், இயக்கத்திலும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரூ.500 கோடிக்கு மேலான வசூல் தக்க சாட்சி.


இந்த நிலையில், சமீபத்தில் பாலிவுட் சினிமா  நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது, அவர் கரங்களைப் பற்றிக்கொண்ட முன்னணி நடிகர் ரன்பீர் கபூர், முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், ரன்வீர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஐ கான் என்று பதிவிட்டு, கமலின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
 
சமீபத்தில் தனது நிர்வாண புகைப்படத்தை நடிகர் ரன்வீர் சிங் பதிவிட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.