வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 26 ஜூலை 2023 (18:42 IST)

167 பள்ளிகளை தத்தெடுத்த பிரபல நடிகை

Lakshmi Manchu
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. இவர், தமிழ் சினிமாவில் ராதா மோகன் இயக்கிய மொழி மற்றும், மணிரத்னம் இயக்கிய கடல் அஅகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, சமூக சேவை பணிகளிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார்.  இவர், ஏற்கனவே தொண்டு  நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பல்வேறு உதவிகள் செய்து வரும் நிலையில்,  தற்போது 167 பள்ளிகளை அவர் தத்தெடுத்துள்ளார்.

நடிகை லட்சுமி மஞ்சு 167 பள்ளிகளை தத்தெடுத்துள்ளதன் மூலம் 16,497 மாணவர்கள் பயனடைவர் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அவர் கூறியதாவது:  ‘’புதுமையான கற்பித்தல் முறைகள் மூலம் மாணவர்களின் மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தை செய்திருக்கிறோம்.  தத்தெடுத்த பள்ளிகளில் 5 மாணவர்களைக் கொண்ட ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும் என்றும்,   தேர்வுகள் நடத்தி, இதன் வழியாக மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும்’’ என்று கூறியுள்ளார்.