பிரபல நடிகையின் அறைக்குள் புகுந்த குரங்குகள் அட்டகாசம்
பிரபல நடிகையின் அறைக்குள் புகுந்த குரங்குகள் அட்டகாசம் செய்துள்ளன. இதுகுறித்த வீடியோவை நடிகை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் நடித்திருந்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இப்படத்திற்குப் பின் அவருக்கு ரசிகர்கள் அதிகமாயினர்.
இதனையடுத்து, அவர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில், பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான காஞ்சிபுரம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர் அண்டாட காணோம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கொடைகானலுக்கு சுற்றுலா சென்றுள்ள அவரது அறைக்குள் புகுந்த குரங்குகள் அட்டகாசம் செய்துள்ளன. இதுகுறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.