கொரோனா பணியில் ஈடுபட்ட பிரபல நடிகர்

Shooting
Sinoj| Last Modified வியாழன், 10 ஜூன் 2021 (22:34 IST)


தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்கள் நடித்துப் பிரபலமானவர் நடிகர் அமித் பார்க்கவ். இவர் தனது மனைவியுடன் இணைந்து கொரொனா பணியில் ஈடுபட்டுள்ளார்.

நடிகர் அமித் பார்க்கவ் கல்யாணம் முதல் காதல் வரை, அச்ச தவிர், மாப்பிள்ளை, கண்மணி , நெஞ்சம் மறப்பதில்லை போன்ற தொடர்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

இவர் சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரஞ்சனியை காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டார். இந்நிலையில்
நடிகர் பார்க்கவ் மற்றும் ஸ்ரீரஞ்சினி இருவரும் இணைந்து கொரொனா கால ஊரடங்கின்போது, கொரொனா மருத்துவ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மருத்துவமனைகளுக்குத் தேவையான சிலிண்டர்கள் வாங்கித் தரும் பணியைச் செய்து வருகின்றனர். இவர்களின் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

இதில் மேலும் படிக்கவும் :