1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified புதன், 12 மே 2021 (16:15 IST)

அனுமதி இன்று நடக்கிறதா சீரியல்களின் படப்பிடிப்பு!

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்புகள் அனுமதி இன்றி நடப்பதாக சொல்லப்படுகிறது.

கொரோனா இரண்டாம் அலை அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் 14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்களும் முடங்கியுள்ளன. இதில் சினிமா படப்பிடிப்புகளும் அடக்கம், இந்நிலையில் சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி கேட்டு பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் முதல்வர் அது சம்மந்தமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் அரசு அனுமதி இன்றியே சில தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது அந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கே பயத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தொலைக்காட்சி நிறுவனங்களின் வற்புறுத்தல்களால் வேறு வழியில்லாமல் நடித்துக் கொடுக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
Source வலைப்பேச்சு