செவ்வாய், 5 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2023 (13:34 IST)

வெள்ளத்தில் சிக்கிய பிரபல நடிகர்.... உதவி கேட்டு கோரிக்கை

vishnu vishal
மிக்ஜாம் புயல் சென்னை மாநகரைப் புரட்டி எடுத்துள்ள நிலையில், இதனால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். பெரும்பாக்கத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை  படகு மூலம் மீட்டு வருகின்றனர்.

அதேபோல்  ஆர்.கே. நபர் பகுதியில்  மழை நீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மக்களை படகுகள் மூலம் போலீஸார் மீட்டு வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் சேன்ட்ரோ சிட்டடியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்த நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி கைக்குழுந்தையுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.

மாமல்லபுரம் அருகே ஈசிஆர் கடம்பாடி பகுதியில் சாலையில் திடீரென்று ராட்ச பள்ளம் உருவான நிலையில், இரண்டாவது நாளாக கிழக்கு கடற்கரை சாலையில் செனை  பாண்டிச் சேரி செல்ல வாகனங்களுக்குத்  விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீர்ப்பறவை, ராட்சசன், லால் சலாம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால் காரப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

எனவே அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வைஃபை, போன் சிக்னல் உள்ளிட்ட எதுவும் இல்லாத நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் வீட்டு டெரஸ்  மீது ஏறி நின்று கொண்டு உதவி கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் புகைப்படத்தை வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.