1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (11:35 IST)

சுஷாந்த் தற்கொலைக்கும் சாத்தான்குளம் மரணத்திற்கும் என்ன தொடர்பு..?

சுஷாந்த் தற்கொலை வழக்கு குறித்து தடயங்கள் ஆய்வு செய்யும் வல்லுனர்கள் குழு  தான் சாத்தான்குளம் தந்தை - மகன் வழக்கிளும் பணியாற்றுவதாக தகவல். 
 
மும்பையில் தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந் சிங் மரண வழக்கு குறித்து தடயங்கள் ஆய்வு செய்யும் வல்லுனர்கள் குழு  சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தடயங்களை ஆய்வு செய்ய உள்ளனர் என சிபிஐ உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் வெளியாகியுள்ளது. 
 
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை உயர் நீதி மன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து எடுத்து கொண்ட வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது விசாரணையின்போது  சிபிஐ தரப்பில் இரண்டாவது இடைக்கால நிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது.
 
சிபிஐ அறிக்கையில் மத்திய தடயவியல் துறை வல்லுநர்கள் தந்தை மகன் இறப்பு குறித்த தடயங்களை ஆய்வு செய்து வருகின்றது. இவர்கள் தான் நடிகர் சுஷாந் சிங் சம்பந்தமான இறப்பு குறித்த தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்த குழு தான் சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு சம்பந்தமான வழக்கை விசாரிக்க உள்ளனர் என சிபிஐ தரப்பில் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை செப்டம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.