1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 செப்டம்பர் 2020 (16:48 IST)

33 வயது மாப்பிள்ளையை கல்யாணம் செய்வதற்கு செத்துடலாம்: கழுத்தை அறுத்து கொண்ட கல்லூரி மாணவி

33 வயது மாப்பிள்ளையை கல்யாணம் செய்வதற்கு செத்துடலாம்
33 வயது மாப்பிள்ளையை கல்யாணம் செய்வதற்கு பதிலாக செத்துவிடலாம் என்று முடிவெடுத்து கல்லூரி மாணவி ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
வேலூரைச் சேர்ந்த கல்பனா என்ற கல்லூரி மாணவி தனியார் கல்லூரி ஒன்றில் எம்சிஏ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவருக்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்த நிலையில் அரசு வங்கி ஒன்றில் பணிபுரியும் மாப்பிள்ளை ஒருவரை பார்த்தனர். அவருக்கு நல்ல வருமானம் வந்தாலும் வயது 33 ஆகி விட்டதால் அவரை திருமணம் செய்து கொள்ள கல்பனாவுக்கு விருப்பமில்லை. ஆனால் அவரது பெற்றோர்கள் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது
 
இதனை அடுத்து பெரும் துயரத்தில் இருந்த கல்பனா இரவில் அனைவரும் தூங்கும்போது 33 வயது மாப்பிள்ளையை திருமணம் செய்வதற்கு பதில் செத்துவிடலாம் என்று முடிவெடுத்து பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனை அறிந்த அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளதால் பெற்றோர்கள் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்ணீரை வரவழைத்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்